ஒரு சமூகத்தின் தன்னிறைவு என்பது அச்சமூகத்தின் உள்ளக வெளியக காரணிகளில் தங்கியுள்ளது. உள்ளக காரணிகளாக கல்வி, பொருளாதாரம், பண்பாடு, கலை கலாச்சாரம், அரசியல், சிந்தனை எழுச்சி இன்னும் பல... அதேபோல் வெளியக காரணியாக பௌதீகவியல் அபிவிருத்தி, மானிடவியல் வளங்கள், உற்பத்தி, தொழில் முறைமை, தொழிநுட்ப வளர்ச்சியும் கையாள்கையும்.
அந்தவகையில் நீண்டகால அபிவிருத்தியை நோக்கிய ஒரு செயல்திட்டங்களும் இதனுள் உள்ளடங்கும். அவ்வாறான ஒரு நீண்டகால அபிவிருத்தி திட்டமான பைத்துல்மால் மூதூர் என்ற செயல்திட்டம் மிக அண்மையில் எமதூரில் அறிமுகமாகியுள்ளதை யாவரும் அறிவீர்கள்.
ஒரு சமூக கடமையை ஊக்குவிக்க முன்வரும் நாம் ஒரு சமூகத்தில் இணங்காணப்படும் பாதகமான கொள்கை மற்றும் முன்னெடுப்புக்களை தடுக்கவும் வேண்டுமல்லவா. அதன் முதற்படியாக பைத்துல்மால் எனும் செயல்திட்டத்தில் வட்டியற்ற குறுகியகால கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முயற்சியில் முதற்கட்ட நடவடிக்கையில் மூதூர் மக்களின் மூலமாக ஒரு தொகை பணம் திரட்டப்பட்டுள்ளது . உண்மையில் இது பாரியதொரு வெற்றியே. காரணம் மூதூரின் பொருளாதார தன்னிறைவை ஒப்பிடுகையில்....
#இதன்_நோக்கங்கள்.....
#முதற்கட்ட_நடவடிக்கை (Mission) - திடீர் குறுகிய பணத்தேவை ஏற்படுகையில் ஒரு மூதூர் பிரஜை வட்டியை நாடுவதை தடுத்தல்.
#நீண்டகால_செயல்திட்டம் (Vision) – சமூகத்தின் உட்கட்டமைப்பு எழுச்சியில் பங்கேற்பு
அனுகூலம் - எம்முடைய (மூதூர் குடிமகன்) உழைப்பு எம்மிடமே சுழற்சியடையும். இதன் விளைவு தன்னிறைவு கொண்ட பொருளாதார கோலம் கட்டியெழுப்பப்படும்.
#நடைமுறை_ஒழுங்கு-
1. சேகரிக்கப்படும் மூதூர் பொருளாதாரம் தேவையற்ற வீண் செலவிற்கு உபயோகிக்கப்படமாட்டாது.
2. வைப்புத் தொகையில் குறைவு ஏற்படாது.
3. சேமிப்பு வருவாயின் கணக்கறிக்கை வருடம்தோறும் காட்சிப்படுத்தப்படும்.
4. பொதுமக்கள், பள்ளிவாயல் சம்மேளனம், உலமாக்கள், புத்திஜீவிகள் போன்றோரின் கண்காணிப்பில் இவைகள் வழிநடத்தப்படும்.
5. பைத்துல்மாலின் செலவீனம் (சேகரிப்பு நபர்கள், அலுவலக நடைமுறை) குறித்து பைத்துல்மால் நிதி ஒதுக்கபடமாட்டாது.
6. ஸதகாகள், நன்கொடை உதவிகள் இங்கே சேகரிக்கப்படும். அவற்றின் மூலம் நிலையான வைப்பை பேணல்.
“
#மூதூரை_சார்ந்தோருக்கு”
காலத்தின் அடிப்படைத்தேவை கருதிய முன்னெடுப்பில் எம் பங்கு என்ன????
யாவரும் இதில் பங்கேற்று பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். (குறிப்பாக குடும்ப நிதியம் family foundation)
“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும்”
(அல்குர்ஆன் 57:18, 2:245, 57:11, 64:17, 73:20)
No comments:
Post a Comment