விடுமுறையில்_சுற்றுலா_செல்லவேண்டாம் என்ற வாசகம் சமகால சூழ்நிலையில் வேறுவிதமான புரிந்துணர்வை உண்டாக்கியுள்ளது சமூக மட்டத்தில். ஏன் இவ்வாறு கூறவேண்டும். இதனை வேறு விதமாக கூறினால் இன்னும் நன்றாக இருக்கும். காரணம் இதில் நாமும் பாதிப்புருகின்றோம்.....
விடுமுறைக்காலம்.
1. குடும்ப உறவுகள், நண்பர்கள் ஒன்றினையும் ஓர் சந்தர்பம்.
2. பாடசாலை மாணவர்களின் கல்விச்சுற்றுலா காலப்பகுதி.
3. சுயகைத்தொழில் மற்றும் சில நாடோடி தொழிலாலிகளின் வியாபர கால எல்லை.
4. வருடம் பூராகவும் உழைக்கும் வர்கத்தின் ஒய்வு காலம்.
5. நாட்டின் பொருளாதார பங்கில் முக்கிய வருமான ஈட்டும் காலப்பகுதி.
பல பிரதிகூலங்களும் இங்கே அரங்கேறுகின்றது.
1. கலாச்சார சீர்கேடு.
2. போதைப்பொருள் பாவனை
3. பொருளாதார வீண்விரயம்
4. வீதி விபத்துக்கள்
முஸ்லிம்கள் நாங்கள் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வடுக்கள் ஆறாமல் இருக்கின்றோம். அவர்களின் கஷ்டங்களை நாங்கள் பங்குகொள்வது எமது கடமை. காரணம் அவர்கள், நாங்கள் கஷ்டப்பட்ட வேளையில் உதவியவர்கள். ஆகவே உங்கள் செல்வங்களில் ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்கி பொருளாதாரத்தில் நிமிர உதவிடுங்கள்.
சுற்றுலா செல்ல இறைவன் காட்டித்தந்த வழிமுறையை ஒருமுறையேனும் பின்பற்றுங்கள். நிச்சயமாக பயனுள்ளதாக அமையும்.
1. அனாதை இல்லம், முதியோர் இல்லம், அங்கவீன பாடசாலைகள் என்பவற்றை தரிசிடுங்கள். அவைகள் உலக வாழ்வின் நிலைபேரற்ற தன்மையை உணர்த்திடும்.
2. புற்றுநோய் வைத்தியசாலை, அங்கவீன இராணுவ முகாம்கள் (இறைவனின் அருட்கொடையை நினைவுகூர வாய்ப்பாகும்)
3. அனர்த்தங்களினால் (இயற்கை, செயற்கை) பாதிப்புற்ற பிரதேசங்கள் (கடந்தகாலங்களை கற்றுக்கொள்ள முடியும்)
4. அறிவியல் சார் தளங்கள், வரலாற்று முக்கிய தளங்கள், கலை கலாச்சார பண்பாட்டு இடங்கள் இயற்கை எழில் பிரதேசங்கள்
5. கிராமிய சூழல் (அங்கே அடிப்படை தேவைகளை இனங்கண்டு உதவிட முடியும்)

"இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன" (அல்குர்ஆன் 30:23)
"அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா?" (
#அல்குர்ஆன் 30:9, 30;42, 35:44, 40:21, 40:82, 47:10)
No comments:
Post a Comment