நவீன அறிவியல்
விஞ்ஞானம் நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்ற மனிதத் தோற்றம் குறித்தான ஆய்வுகளின்
முடிவில் ஆச்சரியம் தரும் வகையான முடிவுகளும் ஆதாரங்களும் இன்று கிடைக்கப்பெற்றன. மனிதத் தோற்றம் குறித்து பெருமளவு உலகம் ஏற்றுக் கொண்ட ஒரு
சில விஞ்ஞான ஆய்வுகளும் இன்றைய மனித வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.
சார்ஸ் ரொபர்ட் டார்வின் என்பவரினால்
1859 ஆம் ஆண்டில் மனிதத் தோற்றம் குறித்தான “டார்வினின் பரிணாம
கோட்பாடு” (Darwin's Theory of Evolution) வெளியிடப்பட்டது. இக்கோட்பாடானது ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளகூடியதாக
இருந்தாலும் பிற்பட்ட காலப்பகுதியில்
மேற்கொள்ளப்பட்டுவந்த உயிரின மூலக்கூற்றியல்
(DNAவை அடிப்படையாகக் கொண்ட) நவீன ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களின்
அடிப்படையில் டார்வின் கூர்ப்புக் கொள்கையானது முரணானதுவென ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சியரா டி அட்டபுர்கா
(Sierra de Atapuerca) எனும் மிக சிக்கலான கடின குகை பகுதிகளில் எடுக்கப்பட்ட நான்கு
இலட்சம் வருடத்துக்கு முந்திய மனிதனின் எலும்புகளை மரபணு பரிசோதனை செய்கையில், அது “நியான்றதல்” (Neanderthals) எனும் ஒரு இலட்சம் வருட பழமை வாய்ந்த மனித இன மரபணுவுக்கு
முற்றிலும் வேறுபட்டதுடன்,
சிறிது காலம் முன்
இதே ஆய்வு குழுவால் சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்ட 80,000 வருடம் பழமை வாய்ந்த “டெனிசொவன்ஸ்” (Denisovans) மனித இனத்து மரபணுவுடன் கச்சிதமாக பொருந்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. (டெனிசொவன்ஸ் என்பது மனித மூதாதையை குறிக்கும் சொல். நியான்றதல்
என்பது குரங்கில் இருந்து பரிணாமம் பெற்ற ஒருவகை மனிதன்). ஆகவே டார்வின் யூகத்தில்
வெளியிட்ட மனித பரிணாமக் கோட்பாடு மேற்கூறிய ஆய்வின் முடிவில் முரணானது என்று
நிறுவப்பட்டுள்ளது. மனிதன் குரங்கில் இருந்து தோற்றம் பெற்றான் என்ற கோட்பாட்டிற்கு
இன்று எதிராக நிறுவப்பட்ட பல ஆய்வுகள் ஆதரமளிக்கின்றது.
இன்றைய தொழிநுட்ப
வளர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு
உயிரின மூலக்கூற்றியல் விஞ்ஞானிகள் மனித தோற்றம் குறித்து பின்வருமாறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
“மனிதனின் உடலை ஆக்கும் ஆக்கக்கூற்று மூலகங்களும் (Human structural elements) இன்னும் புவி (மண்ணில்) உள்ளடங்கியுள்ள
மூலகங்களை (Element) ஒத்தவையாகவே காணப்படுகின்றன” என்று அவர்கள் கருதுகின்றனர்.
இதுபற்றி புனித அல்-குர்ஆன்
பின்வருமாறு விபரிக்கின்றது. “சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும்
களிமண்ணிலிருந்து, அவன் ஆதி மனிதனைப் படைத்தான்” (அல்-குர்ஆன் 55:14, 6:2,
7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 18:37, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76)
மேற்குறித்த புனித
அல்-குர்ஆன் வசனத்துக்கு ஆதரவாக மண்ணில் காணப்படும் மூலகங்களையும் மேலும் மனித
உடலை ஆக்கும் முக்கிய ஆக்கக்கூறு மூலகங்களையும் பற்றிய ஒப்பீடு எமது சிந்தனைக்கு மிகப்பெரும்
உதவியாக அமையும். உயிரியல் கட்டமைப்பை உண்டாக்கும் 26 அத்தியவசியமான மூலகங்களில் ஆறு மூலகங்களே உலகின்
அனைத்து உயிரங்கிகளுக்கும் பொதுவானவை.
பொதுவான ஆறு
மூலகங்கள் காபன் (Carbon), ஒட்சிசன் (Oxygon), ஐதரசன் (Hydragon), நைதரசன் (Nitrogen), பொஸ்பரசு (Phosphorus), கந்தகம் (Sulfur) என்பனவாகும். மேலும் நாம் வாழும் பூமியின் எடை சுமார் 5.9722 ×1024 kg ஆகும். பூமியில் மனித சனத்தொகை 7.5 பில்லியன் ஆகும் என்று 2017ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கின்றது. உதாரணமாக நாம் ஒரு சராசரி
மனிதனின் எடையினை 50kg என்று கருதுவோமாயின் தற்போது பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எடை 7.5 x 109 x 50 பெறுமானத்தின்
பெருக்கமாக அமையும். இதன் பெறுமதி சுமார் 3.75 x 1011 kg ஆகும்.
இயக்கத்தில்
இருக்கும் பூமியானது நாளுக்கு நாள் எடை அதிகரிக்குமாயின் இயக்கம் தொடர்ந்தும்
இயல்பான நிலையில் இருக்கமாட்டாது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். எனவே மனிதன் பிறந்ததுமுதல் அவன் மரணிக்கும்
வரையான வளச்சியுரும் அவனது
தேகம் பூமியில் இருந்தே வளர்கின்றது.
நாம் அறிந்தோ
அறியாமலோ மண்ணையே புசித்து எமது தேகத்தை வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம். இதனை
யாரும் மறுக்க முடியாது. பின்னர் நாம் மரணித்ததும் பூமிக்கே எமது தேகம் உரமாக
மாறுகின்றது. இதனை
பின்வரும் புனித அல்-குர்ஆன் வசனம் பறைசாட்டி நிற்கின்றது. “அவர்களிடம் நம்பிக்கை
இல்லையே என்று நபியே நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், நிச்சயமாக
நாங்கள் (உயிரிழந்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் மீண்டும் புதிதாக படைக்கப்படுவோமா? என்று கூறுவது
(இதைவிட) ஆச்சரியமானதே!” (அல்-குர்ஆன் 15:5, 17:98, 23:35, 25:61, 27:67, 37:16,53, 50:3, 56:47)
எனவே இவ்வாறானதொரு அறிவியல் பற்றிய உண்மையினை நபி முஹம்மது (அவருக்கு
சாந்தி உண்டாகுக) அவர்கள் எவ்வாறு அன்று கூறியிருக்க வாய்ப்புண்டு. நிச்சயமாக இவைகளுக்கு
வாய்ப்பே இல்லை. இது இறைவனின் வார்த்தைகளே அன்றி வேறில்லை.
No comments:
Post a Comment