Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 20, 2018

ஓர் நொடியில்......


Related imageஒரு நொடி என்று வாழ்வில் வீணாக கழித்து விட நினைத்துவிட வேண்டாம். ஒரு நொடி உங்கள் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமைந்து விடும்….
 "நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நொடியிலும் எவனோ ஒருவன் முன்னேறிக்கொண்டு இருக்கின்றான்..."
நீங்கள் ஏளனமாக நினைத்து பலபொழுதுகள் வீணாக பல நொடிகளை கழித்தி இருப்பீர்கள். ஆனால் அவற்றை என்றாவது எண்ணி நாங்கள் கவலைப்பட்டு இருக்கமாட்டோம். காரணம் எமது வாழ்வின் பெறுமதி உணர்வதை விட்டும் நாம் சற்றே தூரமாகத்தான் இருக்கின்றோம்.

ஏதொரு ஒரு நொடியில் பாதிப்புற்ற ஒருவனிடம் இதனை பற்றி கேட்டால் நிச்சயமாக தெரிந்திர வாய்ப்பாகும். ஏன் எவனோ ஒருவன் கூறும் போதுதான் நாம் எமது வாழ்வில் எம்மை திசைதிருப்பிய அந்த நொடியினை பற்றி சிந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டிருக்கும். அதுவரை எமது கண்களில் நேரத்தின் பெறுமதி பற்றி உணர்வதை குருடனுக்கு நிறம் பற்றி வர்ணிப்பதற்கு ஒப்பாகவே நோக்கப்படும்.
Related image 
நேர முகாமைத்துவம் ....
வாழ்வில் போராடி வென்றவன் கூறும் ஒரு ஆலோசனையே... ஆனால் பலர் அவற்றை உணர்வது எதார்த்த வாழ்வில் கடினமாக அமையும். இருந்தபோதும் எமக்கான வாழ்வை தீர்மானிக்கும் ஒரு நொடி நிச்சயமாக எமக்கு வந்தே தீரும்.

அதுவரை கடந்து செல்வோம் எமது வாழ்வின் மீட்டிப்பெற முடியாத வாழ்வை.... நாம் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் எமது ஆயுளை நெருங்கி அழைத்து செல்வது எமக்கு இன்னுமா புரியவில்லை... எமது கடமைகள் நிறையவே இருக்கின்றது. அவற்றை சற்று பரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆத்மாவிற்கும் உரித்தானது....

மனிதனில்
""""""""""""""""""
👉 0.070 லீட்டர் இதயம் இரத்தத்தை பம்புகின்றது. 
👉 0.15 AIDS/HIV நோய் தொற்று ஏற்படுகின்றது.
👉 100,000 மனித கலங்கள் தாக்கமடைகின்றது. 
👉 25,000 நபர்கள் பரவசம் அடைகின்றார்கள். 
👉 8,341,666,667 இதயத்துடிப்பு நிகழ்கின்றது உலகம் முழுதும்.
👉 15 சொற்களை மனித மூளை வாசிகின்றது. 

பிறப்பு இறப்பு 
“”””””””””””””””””””””””””””
👉 4.3 குழந்தை பிறக்கின்றது 
👉 1.8 மனிதர்கள் இறக்கின்றார்கள் 
👉 1.71 ஏழைக் குழந்தை பிறக்கின்றது.
👉 1.28 கிருஸ்துவ குழந்தை, 0.93 முஸ்லிம் குழந்தை, 0.64 இந்து (வேதாந்தக்) குழந்தைகள் பிறக்கின்றது.

இணையத்தளம்
""""""""""""""""""""""""
👉 2,437,859 ஈமெயில்கள் (E-mail) அனுப்பப்படுகின்றது.
👉 9.4 புதிய வலைத்தளம் ஆரம்பமாகின்றது.
👉 469,445 முகநூல் (Facebook) லைக் பதிவாகின்றது.
👉 41,000 புது பதிவு முகநூளில் பதிவாகின்றது.
👉 3,000,000 கூகுல் (google) தேடல் இடம்பெறுகின்றது.
👉 486 வாட்ஸ்ஆப் (Whatsapp) செய்தி பரிமாறப்படுகின்றது
👉 372 ஆபாச (sex) தேடல்கள்.
👉 1 கட்டுரை விக்கிபீடியாவில் (Wikipedia) இல் பதிவாகிறது.
👉 6.67 மணித்தியால வீடியோ (Video) யூடுயூப் (Youtube) இல் பதிவாகின்றது.
👉 13,000 அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்யப்படுகின்றது.
Related image
பொருளாதாரம் 
""""""""""""""""""""""
👉 10,450 கோக்கோகோல பணம் நுகரப்படுகின்றது.
👉 929 லீட்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
👉 200.9 கலன் வைன் குடிக்கப்படுகின்றது.
👉 75 பேகர் உண்ணப்படுகின்றது
👉 45 ஸ்மார்ட் போன் (Smartphone) விற்பனையாகின்றது.
👉 60 லிப்ஸ்டிக் உற்பத்தியாக்கப்படுகின்றது.
👉 41140 kg கழிவு கொட்டப்படுகின்றது
👉 0.97 ஆகாயவிமானம் பறக்க ஆரம்பிக்கின்றது
👉 3 பொம்மை புது நபர்களுக்கு உரிமையாகின்றது
👉 418 கிட்கேட் சொக்லைட் உண்ணப்படுகின்றது.

பிரபஞ்சம்
"""""""""""""""
👉 14.8 km பிரபஞ்சம் விரிவடைகின்றது.
👉 0.08 நிலநடுக்கம் உணரப்படுகின்றது.
👉 16,000,000 லீட்டர் நீர் ஆவியாகின்றது
👉 30 நட்சத்திரம் வெடிக்கின்றது.
👉 4000 புது நட்சத்திரம் தோற்றம் பெறுகின்றது.
👉 100 மின்னல் புவியை தாக்குகின்றது.

    இயற்கை
"""""""""""""""
👉34 மழைக்காட்டு மரங்கள் வெட்டப்படுகின்றது.
👉 3160 லீட்டர் நீர் நயகரா நீர்வீழ்ச்சியில் வீழ்கின்றது.
👉 3.17 பாம்பினால் மனிதன் இறக்கின்றான்.
👉 270 முறை தேனீ இறக்கை அடிக்கின்றது.
👉 5000 தொன் பனிப்பாறை அந்தாட்டிக்காவில் உருகுகிறது.

சில மேலதிக குறிப்பு....
Related image5 நிமிடங்கள் ஒரு முறை பசியினால் ஒரு குழந்தை இறக்கின்றது...
8 வினாடிக்கு ஒருமுறை அசுத்தமான நீரை அருந்தி ஒரு இறப்பு சம்பவமாகின்றது.
3 நிமிடத்தில் ஒரு சிறுவர் துஸ்பிரயோகம் (rape) பதிவாகின்றது...





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages