தற்போது பூமியில்
காணப்படும் இரும்புத் தாது ஆனது உண்மையில் சூரியக் குடும்பத்திற்கு உரியது அல்ல
என்று தற்போதைய வானியல்சார் அறிவியல் தெரிவிக்கின்றது. அந்தவகையில் மிக அண்மையில் இதற்கான
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இன்னும் அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பேராசிரியர் ஸ்டீன் ஜாகப்சன் என்பவரும் கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் சாரா ஸ்டீவர்ட் என்பவரும் செய்த ஆய்வு இதற்கு
வலுவூட்டுவதாக அமைகின்றது.
இவர்களின் கருத்துப்படி இரும்பு என்ற தாது புறவெளியில் காணப்படும் மாபெரும் நட்சத்திரங்களின் வெடிப்பு காரணமாகவே அண்டவெளியில் பரவிக் காணப்பட ஏதுவாகின்றது.
இவ்வாறான நட்சத்திர இறப்பு மூலமாக வீசப்படும் பாகங்கள் பூமியையும் ஏனைய
கோள்களையும் வந்தடைந்துள்ளது. இன்னும் இரும்பானது தோற்றம்பெற சூரியனின் சக்தியினை போன்ற
நான்கு மடங்கு சக்தியைகொண்ட நட்சத்திர கூட்டங்களுக்கே தகுதியுண்டு.
ஆரம்பத்தில்
பூமியானது தீப்பந்தம் போலவும் இன்னும் சிறிய மென்மையான அமைப்பாகவும் காணப்பட்டது. பின்னர் விண்கற்களின் பொழிவினால் (Bombardment Period) புவியின் பருமன் அதிகரித்தது. இதன்காரணமாகவே புவியானது தாதுப்பொருட்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்க சாத்தியமாகின்றது.
இக்கருத்தை புனித
அல்-குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கின்றது. “இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; மேலும் அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும்
இருக்கின்றன” (அல்-குர்ஆன் 57:25)
இங்கு
பயன்படுத்தப்பட்ட அராபிய வார்த்தை “அன்ஸல்னா - இறக்குதல்” என்பதாகும். இவ்வார்த்தையை பல்வேறு இடத்தில்
அல்-குர்ஆன் கையாள்கின்றது. “அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான்” (அல்-குர்ஆன் 6:99, 13:17, 20:53, 78:14) மற்றுமொரு இடம் “அவன்தான் (இவ்) வேதத்தை
உம்மீது இறக்கினான்” (அல்-குர்ஆன் 3:7)
இன்னும் இவ்வாறு
இறக்கப்பட்ட இரும்பின் மூலமாக மானிடன் பெரும் நன்மை அடைவதாக அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.
அவ்வாறான பல நுணுக்கமான இரும்பின் பயன்பாடுபற்றி தற்போதைய நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.
மிக அண்மைக்கால நுண்ணுயிரியலாளரான மைக்கேல் டென்டன் என்பவர் நேச்சர்ஸ்
விஸ்டின் என்ற அவருடைய புத்தகத்தில் இரும்பினதும்
மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பதிவு செய்துள்ளார்.
ü பூமிக்காந்தப்புலத்தை தோற்றுவித்தல். இதனால் சூரியப் புயல் மட்டுமன்றி புவிக்கு ஏற்பட விருக்கும் பாதிப்புக்கள்
தடுக்கப்படுகின்றது.
ü ஓசோன் அடுக்கு தோற்றம்பெற மிக முக்கிய பணியினை இரும்பு
மேற்கொள்கின்றது.
ü மனித குருதி கொண்டுள்ள ஹீமோகுளோபின் என்ற பதார்த்தம்
தோற்றம்பெற அவசியம்.
ü சிலவகை புற்றுநோய் கலங்களை அழிக்க இரும்புக் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகின்றது
இது மிக அண்மைக்காலத்துப் பயன்பாடாகும். இதனை உயர் வெப்பநிலை காந்த திரவம் (high
temperature magnetic liquid) என்று தற்போது அழைக்கின்றனர்.
ü இரத்தச் சோகை நோய்க்கு பரிகாரம் வழங்கும் மிக முக்கிய
மருத்துவத்தில் பயன்படுகின்றது.
அல்-குர்ஆன் இரும்பை
குறித்து பேசுவது ஏன் என்ற வினாவிற்கு விடை கிடைக்கப்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment