
வயோதிக பருவத்தை அடைந்துவிட்ட ஒரு முதியவர் வழக்கம் போல ஒரு நாள் காட்டுக்கு சென்று சுள்ளி குச்சிகளை சேகரத்து ஒரு பெரிய சுமையாக கட்டி தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தள்ளாடியபடி வீடு நேக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அந்நாட்டு மன்னனுக்கு இந்த முதியவரை பார்த்ததும் இறக்கம் பெருக்கெடுத்தது. அவன் தனது தேரை நிறுத்த உத்தரவிட்டான்.
வாருங்கள் பெரியவரே,
வந்து என் தேரில் ஏறிக்கொள்ளுங்கள் என்று முதியவரிடம் கூறினான். முதியவரும் தயக்கத்தோடு தேரில் ஏறிக்கொண்டார்.
ஆனால் தலையிலிருந்த சுள்ளி சுமையை இறக்கி வைக்காமல் சுமந்தபடியே வந்தார்.
என் இப்படி என்று மன்னன் கேட்டதற்கு மன்னா நீங்கள் பெருந்தன்மையாக உங்கள் தேரில் எனக்கு இடம் கொடுத்தீர்கள். ஆனால் அதற்காக என் சுமையையும் உங்கள் தேரில் இறக்கி வைப்பது நியாயம் இல்லையே என்றாராம் முதியவர்.
படிப்பினை -
"ஒரு வகையில் பார்த்தால் நாமும் அந்த முதியவரை போலத்தான். முதியவருக்கு மன்னன் லிப்ட் கொடுத்ததை போல ஆண்டவனும் நம்மை அவரின் தேரில் ஏற்றி கொண்டு தான் செல்கிறார்.
ஆனால் நாம் தான் நமது சுமைகள் எதையும் அவரது தேரில் இறக்கி வைக்காமல் நாமே சுமந்து கொண்டு அல்லல்படுகிறோம்."
இறைவன் எம்மை அறிந்தவன் என்று உணருங்கள்.
No comments:
Post a Comment