உலகில்
பேசப்பட்ட ஒருசில திரைப்படங்களில் Robert Langdon என்ற கதாநாயகனின் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் இவரின்
திரைப்படங்களில் உலகில் மர்மங்கள் என்று நம்பப்படும் வரலாற்று உண்மைகளை உவமைகொண்டு
வெளிக்கொணர்வதே ஆகும்.
May 4, 2009 இல் Ron Howard தயாரிப்பில் உருவான Angels & Demons என்ற Holywood திரைப்படமே இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பின்
பின்னணியில் இருக்கின்றது.
அந்தவகையில் Robert Langdon ஒரு யூதராக இருப்பது மட்டுமன்றி இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை
யூத இனத்தை சார்ந்த நிறுவனங்களே வெளியீடு செய்வது வழமை. அந்தவகையில் Angels & Demons திரைப்படமும் அதனை
சார்ந்த ஒன்றாகும். இன்னும் இலுமிநேட்டிகள் (illuminate)
சம்மந்தமாக இவரது திரைப்படங்கள் பிரதிபலிப்பு உலகில் பெரும் பரபரப்பையும்
சுவாரசியத்தையும் உண்டாக்கக் காரணமானது.
மேற்படி
திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஒரு புதுவித பருப்பொருளை (Matter) உண்டாக்குவதாக காட்சிப்படுத்தப்படுகின்றது. மேற்படி
ஆய்வில் உருவாகும் புதுவித பருப்பொருளை இன்றைய நவீன உலகம் கடவுளின் துகளுக்கு
ஒப்பாக நோக்குகின்றது.
ஏன்
இவ்வாறு நோக்கவேண்டும் என்றால்.....
இந்த
பிரபஞ்சம் பெருவெடிப்புக் கொள்கை (Big bang theory) மூலமாக தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகின்றது. இருந்தபோதும்
இந்நிகழ்வின் பின்னரான தோற்றம்பெற்ற வான்மண்டல பொருட்கள் அனைத்தும் பனிரெண்டு வகை
அடிப்படை அணுக்களை கொண்டு ஆக்கப்பட்டுள்ளதாக standard
model theory என்ற கொள்கை விபரிக்கின்றது.
மேற்படி
கொள்கையின் படி மிக அண்மைக்காலம் வரை பதினொரு அணு வகை கண்டறியப்பட்டு இருந்தது.
இருந்தும் பனிரெண்டாவது அணு மாத்திரம் அன்றைய காலங்களில் கண்டறியப்படவில்லை. இதன்
காரணமாக அவ்வணுவை கடவுளின் துகள் என்று பெயரிட்டு ஆய்வை தொடர்ந்தனர்.

மேற்படி
கருத்தை பீட்டர் ஹிக்ஸ் என்ற இயல்பியல் விஞ்ஞானி முன்வைத்தார். அதாவது
“இப்பிரபஞ்சம் கண்ணுக்கு புலப்படாத அணுவைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது”. மேற்படி
கருத்தை நிரூபிக்க The Large Hadron Collider (LHC) 27 km வட்டமான தொகுதி கொண்டு குழாயில் புரோத்திரன் நியூத்திரன்களை மோதச்செய்து புது அணுவை தோற்றுவிக்கும் முயற்சியில் CERN என்ற
ஆய்வு நிறுவனம் முயற்சித்து வந்து அவ்வாய்வில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.
அதாவது
பிரபஞ்சத்தை தோற்றுவித்த 12 அணுக்களில் 12 ஆவது
அணுவாக நம்பப்படும் அனுவிற்கு இவர்கள் கண்டுபிடித்த ஒரு புது அணு 99% ஒத்துப்போனது. ஆகையினால் இவ்வணுவை கடவுளின் துகளுக்கு
ஒப்பிட்டுக் கூறினார்கள். இவ்வணு higgs boson என்று தற்போது அழைக்கப்படுகின்றது. ஆனாலும் 1% சந்தேகம் நிலவுகின்றது.
மேற்படி
ஆய்வை Angels & Demons திரைப்பட ஆரம்பக்
காட்சிகள் தெளிவாக விபரிக்கின்றது.
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (அல்குர்ஆன் 41:11)
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் 21:30)
Reference
https://home.cern/topics/large-hadron-collid
http://angelsanddemons.web.cern.ch/faq/what-is-the-god-particle
https://en.wikipedia.org/wiki/Standard_Model
No comments:
Post a Comment