பொதுவாக புதையல் என்றாலே
மனிதனுக்கு பேராசை உண்டாகி கற்பனையில் புதையலை அனுபவிக்கும் காட்சிகள் கூட கண்ணில்
கசிந்துவிடும். இருந்தபோதும் ஒருவகை புராண நம்பிக்கை பலரது தேடலையும் ஆசையையும்
அடியோடு அழித்து ஒழித்துவிடும்.
புதையல் என்பது எதனை...
ஒரு கிராமத்தில் இருக்கின்ற
பொறுப்பதிகாரிகள் அந்த கிராமத்திற்கு ஏற்படவிருக்கும் இயற்கை அனர்த்தம், சாதகமற்ற சுற்றாடல் நிலைமை, யுத்த படையெடுப்பு, நோய் தொற்று மற்றும் பிற காரணிகளை முன்கூட்டி தங்களின் அடுத்த தலைமுறைக்காக
அல்லது தங்களின் சேமிப்பை பாதுக்காக கையாண்யாண்டுகொண்ட யுத்தியின் ஒரு வழிமுறையே
இன்று நாம் கூறும் புதையல் எனப்படுபவை.
அதாவது அன்றைய மக்கள் எம்மை
போன்ற வங்கி தொடர்பு மற்றும் பாதுகாப்பு பெட்டி என்பவற்றை கொண்டிருக்கவில்லை.
மாறாக அவர்கள் தங்களின் பெறுமதியான சொத்துக்களை பாதுக்காக பல்வேறு நடைமுறையை
கையாண்டார்கள். உதாரணமாக மண்ணினுள் புதைத்தல், மரப்பொந்துகளினுள் ஒழித்து வைத்தல், கற்பாறை
இடுக்கு மற்றும் குகைகலினுள் மறைத்து வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு மறைத்து
வைக்கப்படும் பொருட்களுக்கு அன்றைய காலங்களில் பெறுமதியாக மதிக்கப்பட்ட பொருட்களான
தங்கம், வெள்ளி, உலோக நாணயங்கள், இரத்தினம், முத்து, வைரக்கற்களை தேர்வு செய்து அறிப்படையா வண்ணமாக பாதுகாத்தனர்.
பொதுவாக இங்கே
பாதுக்கப்படும் பொருட்கள் அன்றைய குக்கிராமங்களில் வாழ்ந்த தலைவர்களினால்
பொதுமக்களிடத்தில் வசூலிக்கப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்படும். இவ்வாறு
வைக்கப்படும் இடத்திற்கு குறித்த சைகைகள், குறியீடுகள், எழுத்துக்கள் மூலமாக அடையாளங்களையும் வழிகாட்டல்களையும் தங்களின்
அடுத்த தலைமுறைக்கு வழங்கி வந்தார்கள்.
மற்றுமொரு கருத்து – சடுதியாக
நிகழும் இயற்கை சீற்றம் காரணமாக ஒரு சமூகம் முழுமையாக அழிவடைய வாய்ப்பாகும்.
அவ்வாறு அழிவடையும் சந்தர்பங்களில் புனிதஸ்தளங்கள், அக்காலத்தில் பொருட் களஞ்சியசாலை மற்றும் செல்வந்தர்களின் பெறுமதிமிக்க
சொத்துக்கள் மண்ணினுள் மறைய வாய்ப்பாகும். அவ்வாறு மறையும் பொருட்கள்
நீண்டகாலங்கள் பின்னர் மண்ணை தோண்டும் போது வெளிப்படலாம்.
ஆனாலும் சில பொருட்கள்
மறந்தும் மறைக்கப்பட்டும் பூமியில் புதையலாக விளைகின்றது மிக நீண்டகாலத்தின்
பின்னர். இவ்வாறான பெறுமதிமிக்க சொத்துக்களைத்தான் இன்று நாம் புதையல் என்று
அழைக்கும் பூமித்தாய் வழங்கும் பொக்கிசங்கள்.
அவ்வாறாயின் எமது சமூகம்
கூறும் புதையல் என்று என்ன????
நான் கேள்வியுற்ற பழங்காலக்
கதையையும் படிக்காத கதையையும் இங்கே பதிவேற்கின்றேன்.
ஒரு கிராமத்தில் மக்கள்
ஒன்றுகூடி தங்கள் சொத்துக்களை புனிதஸ்தளங்களின் எல்லைகளினுள் கடவுளுக்கு காணிக்கையக்குவார்கள்.
அவ்வாறு காணிக்கையாக்கும் போது அக்குறித்த சொத்துக்களை மண்ணினுள் புதைத்து அதற்காக
ஒரு உயிர்பலியையும் சடங்காக நடத்துவார்கள். காரணம் அந்த பலி கொடுக்கப்பட்ட உயிர்
அந்த புதையலை பாதுகாக்கும் காவலாளியாக நியமிக்கப்படவேண்டும் என்பதற்காக. மேற்படி
பலிகொடுக்கப்பட்ட உயிர் குறித்த காலத்தின் பின்னர் தனது பணியை நிறைவு செய்ய ஏதாவது
புதையலின் பெறுமதிக்கு ஏற்றவாறு காணிக்கையை கேட்குமாம். அவ்வாறு கேற்கும்
காணிக்கையை கொடுத்து நாம் குறித்த புதையலை பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகும்.
பூதம் புதையலுக்காக கேற்கும்
காணிக்கை .....
1. ஒரு குடும்பத்தின் முதல் ஆண்பிள்ளை
2. கன்னி கழியாத அழகிய பெண்
3. குறித்த இராசி கொண்ட பிறந்த குழந்தை
4. ஒற்றை குழந்தை கொண்ட ஒரு தம்பதியின் குழந்தை
5. மாடு, ஆடு, கோழி.....
பூதம் கேற்கும் காணிக்கைகளை
எந்த அறிவுள்ள மனிதனாவது கொடுத்து அற்பமான சொத்தை பெற்றுக்கொள்ள முன்வருவானா???? இல்லைவே இல்லை காரணம் சொத்துக்களில் உயர்ந்த சொத்து
குழந்தை சொத்து என்பதனால்....
இவ்வாறாயின் காணிக்கையின்
மூலமாக புதையலை பாதுகாத்துவைப்பதும் தனிமனிதன் ஒருவன் பெறுமதியான பொக்கிஷத்தை
உரிமை கொண்டாடிவிடக் கூடாது என்பதுமே நோக்கமாகும்.
புதையலை எடுத்தால் பேய்
பிடிக்கும் புத்தி கெடும் என்று கூறுவதன் உண்மை தன்மை யாதாக இருக்கும்????
உண்மையில் இதற்கு நல்லதொரு
அறிவியல் உண்மை உண்டு. உதாரணமாக மிக நீண்டகாலம் பாதுக்காப்படவேண்டிய பொருட்களை
அன்றைய கால மக்கள் இயற்கை கூட்டுத்திரவியங்களை கொண்டு இரசாயனங்களை தோற்றுவித்தனர்.
இவ் இரசாயனம் திடிரென வெளிப்படும் போது மனிதனில் சுவாசிக்க சிரமத்தை, உடலியல் முடக்கத்தை மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும்
சக்திகொண்டாதாகும். இதனை அறியாமல் புதையலை கையாளும்போது இவ்வாறான தாகத்திற்கு
உண்டாகும் வாய்ப்புண்டு.
அடுத்த காரணம் பேய்
பிசாசுகள் என்ற மூடநம்பிக்கை அன்றைய காலங்களின் பெரிதும் நம்பப்பட்டது. எனவே
இவ்வாறான பெறுமதியான பொக்கிஷங்களில் குறித்த மூடநம்பிக்கை அடிப்படை வேண்டப்பாடக
காணப்பட்டது.
இதுவே புதையல் பற்றிய
கதை.....
என்னைப்பொருத்தமட்டில் புதையல்
என்பது ஒரு தலைமுறைக்காக அவர்களின் முன்னோர்கள் விட்டுச்செல்லும் பயனுள்ள கல்வி
என்பதே.....
No comments:
Post a Comment