புனித அல்-குர்ஆன் பற்றிய முஸ்லிம் அல்லதா ஏனைய
மதக்கோட்பாடு கொண்ட மானிடர்களின் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டம் அன்றைய நபி முஹம்மது
(ஸல்) அவர்களின் காலம் தொடக்கம் இன்றைய நவீன நாகரிகம் வரை தொடர்ந்து கொண் டேதான்
இருக்கின்றது. அந்தவகையில் எனது இந்த நூலை கற்பதற்கு முன்னர் அல்-குர்ஆனின் பற்றிய
உண்மைப் பின்னணியினை சற்று நோக்குவது மிக கடப்பாடாக உள்ளது.
இஸ்லாம்
முஹம்மது நபி (ஸல்) என்ற புனிதர் மூலமாக தோற்றுவிக்கப்பட்டது என்று ஒரு கூட்டமும் மற்றுமொரு சமூகம் இஸ்லாம் என்பது கிறிஸ்தவ
சமயத்தில் இருந்து பிறந்த மார்க்கம் என்றும் இன்று வரை எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.
உண்மை யாதெனில் பூமியில் எப்போது ஆதிமனிதனான ஆதம் (அலை) (Adam) இறக்கப்பட்டரோ அன்றிலிருந்து
புனித மார்க்கமான இஸ்லாம் பிறந்துவிட்டது.
ஆனால்
அல்குர்ஆன் அவ்வாறு அன்று. அது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கட்டம்
கட்டமாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு இறக்கப்பட்ட வெளிப்பாடாகும்.
அல்-குர்ஆனைக் குறித்து உலகில் மூன்று
விதமான கோட்பாடுகள் நடைமுறையில் நிலவுகின்றது.
ü
முழு உணர்வில்
அல்லது உள் மனதால் அல்லது வெளி மனம் அறியாத
உள்ளுணர்வால் முஹம்மது அவர்கள் இயற்றினார். அவரே குர்ஆனின் ஆசிரியர்.
ü
முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் வேறு பல மனிதர்கள் மூலமாக கற்றுக்கொண்டு அல்லது மற்ற மதவேத கிரந்தங்களில் இருந்து
அறிவை பெற்றுக்கொண்டு குர்ஆனின் வேத அறிவை வெளியிட்டார்.
ü
குர்ஆனுக்கு எந்த
மனிதரும் ஆசிரியர் அல்ல. மாறாக அது வல்ல இறைவனின் இறைவாக்கு ஆகும்.
இவ்வாறான மாற்றுக்கருத்துக்களுக்கு
அல்-குர்ஆன் இவ்வாறு பதில் அளிக்கின்றது.
“அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, (இவ்வேதம்) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்” (அல்-குர்ஆன்
4:82)
அத்துடன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் பல்வேறு
வகையான குற்றச்சாட்டுகளை பலதரப்பு மனிதர்கள் அன்றுதொடக்கம் முன்வைத்து வந்தார்கள்.
அவர்கள் கூறும் ஒவ்வொரு பொய் குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான முரண் ஆதாரங்கள்
முன்வைக்கப்பட்டு நிரூபித்து காட்டப்பட்டது. இது அன்றைய முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் காலத்தி லேயே சாத்தியமானது.
குற்றச்சாட்டுக்கள்.....
ü உலக இலாபம் ஈட்டுவதற்கு
ü தலைமைத்துவத்திற்கான வேட்கை
ü அரபுகளின் ஒற்றுமையும் விடுதலையும்
ü ஒழுக்கமுறை சீர்திருத்தம்
ü காக்கா வலிப்பு மற்றும் இழுப்பு வியாதியால் பாதிப்பிற்கு
உள்ளானவர்.
ü மத சம்பந்தமான பொய்த்தோற்றக் கோட்பாடு களை முன்வைத்தமை.
ü மனநோயாளி (மைத்தோமேனியா எனும் மன நோயால் பாதிப்புற்றவர்)
ü குர்ஆன் பிரதிசெய்யப்பட ஒன்று
“குர்ஆன் பிரதிசெய்யப்பட ஒன்று” தலைப்பைப் பற்றிய குற்றச்சாட்டை இங்கே ஒருசில முன்னுதாரணங்கள் கொண்டு சற்று சுருக்கமாக விளக்க முற்படுகின்றேன். காரணம் “நான் ஒருமுறை எனது இந்து
சகோதரன் ஒருவரிடம் மதம் பற்றிய கலந்துரையாடல் செய்த போது அவர் மிகவும் உறுதியாக
இருந்த கோட்பாடு” இது என்பதனால்.....
1.
முஹம்மது நபி (ஸல்)
வரக்கா பின் நெளபல் என்பவரிடம் இருந்து குர்ஆனை கற்றார்.
மறுப்பு - வரக்கா என்பவர் பைபிளின் வேதாகமத்தில் பண்டிதராக
திகழ்ந்தார். இவரை முஹம்மது நபி அவர்கள் வாழ்நாளில் இருமுறையே சந்தித்தார்கள்.
இன்னும் இறை வெளிப்பாடு நபிக்கு இறக்கப்பட்டு 3 வருடங்களில் அவர்
இறந்துவிட்டார். இருந்தும் நபியவர்கள் 23
வருடங்கள் தொடர்ந்து குர்ஆனின் வெளிப்பாட்டை
வெளியிட்டார்கள்.
2.
முஹம்மது நபி (ஸல்) ரோம் நாட்டைச்சேர்ந்த
ஒரு கிறிஸ்துவ கொல்லரிடம் குர்ஆனை கற்றார்.
மறுப்பு - “நிச்சயமாக
அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே (இறைவனல்லன்) என்று அவர்கள் கூறுவதை
திடமாக நாம் அறிவோம். எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ அவனுடைய மொழி அரபி அல்லாத
அன்னிய மொழியாகும். ஆனால் இதுவோ தெளிவான அரபி மொழியாகும்” (அல்-குர்ஆன் 6:103)
3.
முஹம்மது நபி (ஸல்)
அரேபியாவிற்கு வெளியில் இருந்த யூதர்கள், கிறிஸ்தவர்களிடமிருந்து புனித குர்ஆனை
கற்றார்.
மறுப்பு – முஹம்மது நபி ஸல் அவர்களைச்சூழ எந்நேரமும் மனிதர்கள்
சூழ்ந்து இருந்தார்கள். இன்னும் முஹம்மது நபி (ஸல்) எப்போது தவறு விடுவார் என்று
இமைக்காமல் காத்து இருந்தனர்; இஸ்லாத்தின் விரோதிகள். அதுமட்டு மன்றி நபியவர்கள்
தூதுத்துவத்திற்கு முன்னர் மக்காவிற்கு வெளியே மூன்று முறைகளே பயணம்
மேற்கொண்டார்கள்.
தெளிவான மறுப்பு - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்மி (எழுத வாசிக்க தெரியாத) ஒருவராக இருந்தார். இதுவே முஹம்மது நபி மற்றும் அல்-குர்ஆன்
பற்றி முன்வைக்கப்படும் அனைத்துவிதமான குற்றச்சாட்டு க்களுக்கும் விடையாக
அமைந்துவிட்டது.
இதற்கு உதாரணமாக பைபிளில்
இறுதி தூதர் பற்றிய முன்னறிவிப்பை இங்கே கூற விரும்புகின்றேன். பைபிள் ஏசாயா
அத்தியாயம் 29 வசனம் 12 ஆனது இவ்வாறு கூறுகின்றது.
“வாசிக்கத் தெரியாதவனிடத்தில்
புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி
என்றால், அவன்: எனக்கு வாசிக்க தெரியாது என்பான்” (பைபிள் 29:12)
இதனையொத்தவாறு குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது. “அன்றியும்
(நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம்
வலக்கையால் அதனைக்குறித்து எழுதுபவராகவும் நீர் இருக்கவில்லை; (அவர்கள் எண்ணுவது
போன்று) அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் உம்மை சந்தேகப்படலாம். (அல்-குர்ஆன் 29:48, 7:157, 62:2)
இவ்வேதம் வல்ல இறைவனிடத்தில் இருந்து இறக்கப்பட்ட வேதம்
என்று இறைவனே இதற்கு சாட்சி கூறுகின்றான்.
ஒரு எழுத்தாளர் எந்த வகையிலும் தனக்கு கிடைக்கவிருக்கும்
உயர்தரமான கண்ணியத்தை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார். இது ஒருவகை மனித
இயல்பாகும். முஹம்மது நபி ஸல் அவர்கள் உண்மையில் இறைதூதர் அல்லாது ஏனையோர் போல்
போலி தூதுவராக இருப்பின் நிச்சயம் அவர் எழுதிய நூலில் இன்னுமொருவருக்கு
முக்கியத்துவம் வழங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே இதுவும் ஒருவகை ஆதாரமே அல்குர்ஆன் இறைவன் வார்த்தை
என்பதற்கு. இதுபற்றி
“தெளிவான இவ் இறைவேதம், யாவரையும் மிகைத்தோனும், ஞானம்
மிக்கோனுமாகிய வல்ல இறைவனான அல்லாஹ்விடமிருந்து
இறக்கிளப்பட்ட ஒன்றாகும்” (அல்-குர்ஆன் 45:1~2, 6:9,92, 12:1~2, 20:113, 27:6, 32:1~3, 36:1~3, 39:1, 40:2, 45:2,
55:1~2, 56:77~80, 76:22, 77:80 )
இதற்கு இறைவன் அளிக்கும் வாய்ப்பு அல்-குர்ஆனில் முரண்பாடு
காண்பதோ அல்லது குர்ஆன் விடுக்கும் சவாலில் ஜெயிப்பதுமே.
நிகழ்கால சவால்கள் :-
ü
அல்குர்ஆனில் இருந்து ஏதாவது ஒரு முரண்பாடு ஒன்றையாவது காண்பிப்பது.
ü
அல்குர்ஆனைப் போன்ற ஒன்றை அல்லது ஓர் பகுதியை அல்லது ஓர் அத்தியாயத்தையோ
உருவாக்கி காட்டுவது.
இறந்தகாலத்தில் விடுக்கப்பட்ட சவால்கள் :-
ü
அபூ லஹப்
இஸ்லாத்தை ஏற்கமாட்டார்.
ü
யூதர்கள்
மரணத்தை விரும்பமாட்டார்கள்.
ü
முஸ்லிம்கள் உங்களுக்கு யூதர்களை காட்டிலும்
கிருஸ்த்தவர்கள் நெருக்கமானவர்கள்.
இவ்வாறான உதாரணங்கள்
மூலமாக அல்குர்ஆன் இறைவாக்கு என்று புலனாகின்றது. மேலதிகமான தெளிவைப்பெற “அல்-குர்ஆன்
இறைவாக்கா?” என்ற நூலை அணுகவும்.
No comments:
Post a Comment