சமகாலங்களில் விபச்சாரம்
மலிந்துவிட்டது. ஆனால் கேவலம் திருமணம் முடித்து குழந்தைகள் கூட இருக்கின்ற
வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சிபெற்ற ஆண்கள் மூலமாக சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் தொல்லை போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை ஆங்காங்கே
எமது காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் எத்தனையோ செய்திகள்
உலகிற்கு வெளிவராமலே மறைந்து மனதினுள் புதையுண்டும் போகின்றது....
இவற்றுக்கான காரணங்களை நாம்
என்றைக்காவது ஆராய்ந்து பார்த்ததுண்ட இல்லை என்றே கூறவேண்டும். அநேகமான சிறுவர்
துஸ்பிரயோகம் குடும்ப உறவினர்கள் மூலமாக இதிலும் குறிப்பாக அதிக தொடர்புகள் கொண்ட
குடும்ப உறவுமுறைகள் மூலமாக நடைபெறுகிறது.

மனித இனத்தின் இயல்பான
உடலியல், உளவியல் சார்ந்து இப்பிரச்சினையை நோக்கும்போது இது ஒருவகை
நேர் கண்ணோட்டத்தை காணவைக்கின்றது. காரணம் உடலியல் ரீதியாகவும் உளவியல்
ரீதியாகவும் இவ்விரு உறவுகள் ஒன்றித்து ஒருமைப்பாடு அடைவதே.
மேற்படி பிரச்சினை குறிப்பாக
கீழத்தேய நாடுகளில் அதிகம் நடைபெறுகின்றது. இதற்கான காரணம் எமது குடும்பவியல்
நடைமுறை. கூட்டுக்குடும்பம் என்ற குடும்பவியல் நடைமுறை எமது சமூகத்தில் அதிகம்
பரம்பியுள்ளது. பெற்றோர் பிள்ளை உறவில் ஏற்படும் விரிசல் மேற்படி குடும்ப
உறவுகளுடன் உறவாடும் சூழ்நிலை உண்டாகி அதன் உச்சம் இவ்வாறன பாரதூர முடிவினை
கொண்டுவருகின்றது. இதற்கு அடிப்படையாக பெற்றோரின் கவனக்குறைபாடு, பெற்றோரின் தொழில் முறைமை (தொழிவாய்ப்பு, வெளிநாட்டு தொழில்), இல்லற வாழ்வில் பெற்றோர் பிள்ளை உறவின்மை சுட்டிக்காட்ட முடியும்.
மேற்படி காரணங்களுக்கு மேலாக
நாம் இதுவரை சிந்திக்காத ஒரு காரணம் இருக்கத்தான் செய்கின்றது. அதுதான் எமது
வயோதிப உறவுகளை தனிமைப்படுத்துவது.
எமது சமூகத்தில் ஒரு மறைகண்ணோட்டம்
கொண்ட குடும்பவியல் நிலைப்பாடு உண்டு. அதாவது ஒரு பெற்றோரின் தங்கள் குழந்தைகள்
வாலிப நிலையை அடைந்தததும் பெற்றோர் தங்களின் இல்லற வாழ்விற்கு முற்றுப்புள்ளி
வைப்பது. இது உண்மையில் ஆரோக்கியமான செயற்பாடு என்றால் மிகப்பெரும் தவறு என்றே
கூறவேண்டும்.
காரணம் - வயோதிப நிலையில்
பெண்களை பார்க்கிலும் ஆண்களுக்கு உடலியல தேவை அதிகம் வேண்டப்பாடாக இருக்கின்றது. ஆனால் இல்லறவாழ்வின் விரிசல் மாற்றுவழியை கையாள
தூண்டுகோலாக அமைகிறது. இதற்காக அவர்கள் அவர்களை சூழ்ந்துள்ள நெருங்கிய இரத்த
உறவுகளை நாடுகின்றனர். இல்லை விபச்சாரம்,
கற்பழிப்பு குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பாகின்றது.
இன்னும் பெண் குழந்தைகளின்
ஆடை கலாச்சாரம், உள்ளக வீட்டில் குழந்தை உறவினர் தொடர்புடமை, குழந்தை உளவியல் நிலைப்பாடு போன்றவற்றை எமது பெற்றோர்கள்
மிகவும் உன்னிப்பாக அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம் அண்மைய சூழ்நிலைமைகளை ஒப்பீடு
செய்கையில்.
இஸ்லாமிய வாழ்வியல் முறையை
சற்றி இங்கே ஒப்புநோக்குவது மிகவும் பொருத்தமாக அமையும். நபி முஹம்மது ஸல்
அவர்களின் இல்லறவாழ்வு எமக்கு பல சமூகவியல் இல்லற வாழ்வியல் குற்றங்களை
நிபர்த்திக்க வழிகாட்டும்.
பொதுவாக வயது முதிர்வை
எட்டிய பெற்றோர்களுக்கு அவர்களின் உடலியல், உளவியல் நிலைமைகளில் சற்று கரிசனை காட்டவேண்டும் அவர்களின் இரத்த உறவுகளான
பிள்ளைகள். உடலியல் தேவை உள்ள நபர்கள் பலர் எமது சமூகத்தில் இருக்கின்றார்கள்
அவ்வாறானவர்களுக்கு எமது சமூகத்தின் வழிகாட்டல் மற்றும் மாற்றுவழிமுறைகளை நாம்
இதுவரையில் உருவாக்கவில்லை.
பொதுவாக எமது சமூகத்தில்
உள்ள உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய அழைப்பார்கள் இது பற்றிய விழிப்புணர்வு மற்றும்
வழிகாட்டல்களை முன்வைக்காமல் இருப்பதும் ஒருவகை குற்றமாக நோக்கவேண்டியதாக உள்ளது. ஜும்மாக்கள், இஜ்திமாக்கள் இவ்வாறான தலைப்புக்களில் நடாத்தப்படுவதும்
எமது சமூகத்தில் அரிதாகவே உள்ளது....
தொடர்ந்தும் குற்றம்
செய்தவனை குறைகான்பதை விட்டுவிட்டு தீர்வுகளை கண்டறியவேண்டிய நாமே முதல்
குற்றவாளியாக இருக்கின்றோம்....
No comments:
Post a Comment