வாய்ப்புற்றுநோய் கிழக்காசிய நாடுகளிலேயே பெருமளவு பாதிப்பை உண்டாக்கியுள்ளது. காரணம் கிழக்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலாச்சாரமும் உணவு வழக்கமும் இந்நோய் ஏற்படுத்த பின்னணி காரணியில் அமைந்துள்ளது.
வாய் புற்றுநோய் (Oral sub mucous fibrosis - OSF) சமகால சூழலில் மூதூரில் பெருமளவு
பேசப்படும் புற்றுநோய் வகையை சார்ந்தது. சுமார் 7 உயிரிழப்புக்கள் இதன் காரணமாக மூதூரில் ஏற்பட்டுள்ளது.
ஆனால் 15க்கு மேற்பட்ட நபர்கள்
வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்நோய்க்கான அடிப்படைக்
காரணமாக வெற்றிலை மெல்லும் பழக்கம் அமைந்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் பழக்கம்
காரணமாக வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை என்பவற்றை ஒன்றினைத்து நீண்ட நேரம் மெல்வது
மட்டுமன்றி வாயினுள் அடக்கிவைத்து இன்பம் காண்பது அவர்களின் வாழ்கையில்
மிகப்பெரும் துன்பத்தை உண்டாக்கக் காரணமாகின்றது.
புகையிலை கலந்த பாக்கை மெல்லத் தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கண்ண உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகிறது.
இப்படிப்பட்ட கடினப்பட்ட வாய் உள் தசை நார்களில் புற்று நோய் உருவாகிறது. அது மிகக் குறுகிய காலத்தில் வாய் புற்று நோயாக ஆகி, பேச்சுக்கும் பிறகு உயிருக்கும் உலை வைத்து விடுகிறது.
சிறிய வாய்புண் தொடக்கம் பெரிய வாய்ப்புற்றுநோய்
வரை பால், வயது பிரதேச
எல்லை வேறுபாடு இன்றி வாய் நோய்கள் அனைவரையும் தாக்கியுள்ளது எனலாம். குழந்தைகள்
பபிள் கம் (சுவிங்கியம்) உண்ணுதல், இனிப்பு வகைகள், சிலவகை டொபி என்பனவும் சமகாலங்களில் இந்நோய் ஏற்படுத்த
காரணமாகின்றது என்று பல் வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக வாய்ப்புற்று நோய் ஆரம்பத்தில்
சிறிய நோயாக கண்டுகொள்ளப்படாமல் இருந்தபோதும் அதன் தாக்கம் மிகப்பாரதூரமான விளைவை
எமது சமூகத்தில் உண்டாக்கியுள்ளது. இதனை பலர் உணர்ந்தும் அவர்களின் பழக்கவழக்கங்களினால்
அடிமையாகி அவர்கள் பாதிப்படைவது மாத்திரமன்றி அவர்களை சூழலை உள்ள உறவுகளையும்
பெரும் சங்கடம், கஷ்டத்திற்கு
ஆளாக்குகின்றனர்.
மேற்படி வாய்ப்புற்று நோய் ஏனைய நோய்களை
போன்று அகத்தில் மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக இது அகம் புறம்
இரண்டிலும் தாக்கம் ஏற்படுவதன் காரணமாக உளவியல் ரீதியான சடுதியான சோர்வை குறித்த
நோயாளி அனுபவிக்க ஏதுவாகின்றது. இன்னும் பொதுவாக வாய்ப்புற்று நோய் காரணமாக
குறித்த நோயாளியினை சூழ சகித்துக்கொள்ள முடியாத துர்வாடை ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலைமையில்
அவர்களின் உறவுகள் நெருக்கமாக இருந்து மகிழ்வாக வைத்திருப்பது மிக அவசிமான
ஒன்றாகும்.
பொதுவாக எமது ஊரில் 40 வயதை தாண்டிய குறிப்பாக பெண்கள் வெற்றிலை
பழக்கத்திற்கு அடிமையாகின்றமை அவதானிக்க கிடைத்தது. உண்மையில் நீங்கள் செய்யும்
செயற்பாடு உங்கள் உயிரை மாய்ப்பதற்கு ஒப்பாக அமைந்திடுகின்றது எதிர்காலங்களில். இதனால்
உங்களை சார்ந்தோர்கள் யார் இவ்வாறான பழக்கங்களில் இருப்பின் அவர்களுக்கு
எச்சரிக்கை செய்வது மாத்திரமன்றி இவ்வாறான பழக்கங்களினால் நோயுற்ற நோயாளிகளை
காண்பித்து அவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்குங்கள். இயலுமாக இருந்தால் வைத்தியசாலை
சென்று புற்றுநோய் பிரிவில் நோயினால் அவதியுறும் நபர்களை காட்சிப்படுத்துங்கள்.
நீங்கள் செய்யும் ஒரு சிறு முயற்சி நாளை
பெரும் ஒரு நலவை உண்டுபண்ண வாய்ப்பாகும் எமது சமூகத்தில்.
No comments:
Post a Comment