
மனிதன் தனக்கென சில உடல்,உள மற்றும் சமூகவியல் குணவியல்புகளை கொண்டுள்ளான். அவ்வாறான இயல்புகள் பற்றி மறைமுகமாக அல்-குர்ஆன் முன்னைய இரு தூதர்களைக் கொண்டு விபரிக்கின்றது.
மனிதரியல்பு – கோபம், பகை, பழிவாங்குதல், அவசரம், விடந்தாவாதம், பிடிவாதம், சந்தேகம், வரட்டுகௌரவம், ஆவேசம், அகங்காரம், பெருமை, முரட்டுகுணம், பொறாமை, பக்கச்சார்பு.......
புனிதரியல்பு – மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, பொறுமை, தியாகம், நிதானம், சகிப்புத்தன்மை, தாரளமனம்.........
மனிதரியல்புக்கு மூஸா (நபி) என்பவரையும் புனிதரியபுக்கு இப்ராஹீம் (நபி) அவர்களையும் இறைவன் அவர்களின் வரலாற்று சப்பவங்களை ஒப்பிட்டு எமக்கு பாடம் புகட்டுகின்றான்.
அல்-குர்ஆன் மூஸா பற்றி சுமார் 195 இடங்களில் பேசுவதுடன் இப்ராஹீம் (நபி) பற்றி 128 இடங்களில் பேசுகின்றது. இவ்விரு நபிமார்களே அதிகளவில் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் நான் மேற்குறிப்பிட்ட வசனம் மாத்திரமே அவர்கள் இருவரையும் இணைத்து சுட்டிக்காட்டுகின்றது. இதற்கான காரணம் அல்குர்ஆன் கூறமுட்படும் உபதேசம் இவ்வசனத்திற்கு மேலுள்ள வசங்கள் பொதிந்துள்ளமையினால்.
புனித அல்குர்ஆன் இவ்விரு தூதர்களையும் கொண்டு மனித சமூகத்திற்கு வழிகாட்ட முற்படுகின்றது. அந்தவகையில் ஒரு மனிதனின் சூழ்நிலை நேரம் என்பனவே அவனது நடத்தையை தீர்மானிக்கும் இயல்பாக அமைகின்றது. ஒருவன் நல்லவன் கேட்டவன் என்ற தீர்மானம் அவனின் நடத்தையில் நிர்ணயமாகும் என்பார்கள். இருந்தபோதும் அவைகள் தீர்மானிப்பது வெறும் இயல்பான குணத்தை சார்ந்ததாக அமையாது. காரணம் மனிதன் உணர்வுகளிற்கு அடிமையான விலங்கு இனத்தை சார்ந்தவன் என்பதனால்.
மேற்படி நபிமார்களை அல்குர்ஆன் கீழ்வரும் வசனங்களில் விபரிக்கின்றது.
மூஸா - (2:51~61,65,67~73,92,93,108,136,253) (3:84) (4:153,164) (5:20,22,24) (6:84,91,154) (7:103,104,107~132,138,142,143,144,148,150,154,155,159,160,163) (10:75,77,80~84,87,88) (11:17,96,110) (14:5,6,8) (17:2,101) (18:60,66) (19:51) (20:9~24,36,40,49,57,61,65,67,70,77,83,86,88,91) (21:48) (22:44) (23:45,49) (26:10,13,14,18,33,37~52,61,63,65) (27:7,9,10) (28:5~20,29,30,31,34~38,43,44,48,76) (29:39) (32:23) (33:7,69) (37:114,120) (40:23,26,27,37,53) (41:45) (42:13) (43:46) (46:12,30) (51:38) (53:36) (61:5) (79:15) (87:19)
இப்ராஹீம் - (2:124~127,132~136,140,258,260) (3:33,65,68,84,95,97) (4:54,125,163) (6:74~80,83,161) (9:70,114) (11:69,70~76) (12:6,38) (14:35~41) (15:51~57) (16:120,123) (19:41~49,58) (21:51~70) (22:26,27,43,78) (29:17,31) (33:7) (37:85~98,102~109) (38:45) (42:13) (43:26) (51:24~28) (53:37) (57:26) (60:4) (87:19)
No comments:
Post a Comment