ஸதகதுள் ஜாரியா (நிரந்தர தர்மம்) என்று எம்மில் பலர் செய்யும் சதகாக்கள் இன்று பல இடங்களில் பயனற்றதாகி போகின்றது.
அந்தவகையில் ஷதகதுள் ஜாரியா என்ற பலரது குறுகிய மனப்பாங்கு பார்வை காரணமாக குறுக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களில் பகிரப்படுவது கவலையளிக்கின்றது.
குறிப்பாக பள்ளிவாயல் அமைப்பதற்கும் அதனை விஸ்தீரணப்படுத்துவதற்கு காட்டும் ஆர்வம் சில விடயங்களில் விழிமூடி இருப்பதன் நோக்கம்தான் என்ன????
"அண்மையில் ஒரு பள்ளிவாயல் நிர்வாகம் மூலமாக ஒரு மருத்துவ மாணவன் உருவாக்கப்பட்டார். இவைபோன்ற பயனுள்ள வேலைத்திட்டங்களை சமூகம் பன்முகப்படுத்தவேண்டும்"
இவையும் ஸதகத்துள் ஜாரியாவே.....
1. பயனுள்ள_நூல்களை_வெளியீடு_செய்ய உதவுதல்.
2. கல்வி துறையில் தேவையுடையவர்களை இனங்கண்டு குறைகளை_நிபரத்தி செய்தல். (நூல், கணனி, உபகரணம், வாய்ப்புகள்)
3. இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் தூரநோக்குடைய சிந்தைக்கு #முதலீடு செய்தல். (ஆய்வுகூடம் சாதனம், வழிகாட்டி நூல்கள், பயண, ஆய்வு செலவீனம்)
4. துறைசார்ந்த நிபுனர்களுடனான_பிணைபை ஏற்படுத்த வழிகாட்டலும் வழியமைத்தலும். (Intelligent Resources pool )
5. ஊடக பயன்பாடு மற்றும் ஊடக அபிவிருத்தி முன்னெடுப்புகள்.
6. இம்சாவழி, அகிம்சாவழி போராட்டம் (சிந்தனா ரீதியான) முனைப்பாக இளைஞர்கள் சமூக கட்டமைப்பை தோற்றுவித்தல்.
அந்தவகையில் மார்க்க அறிவு வெறும் ஜூப்பா, தூசி தட்டப்படாதா பழைய ஏடுகளில் எழுதப்பட்ட பழங்கால குறுகிய சிந்தனை கல்வி வழிகாட்டலில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்கால எதிர்காலத்தினை நோக்கிய பயணத்திற்கு ஏற்றால் போல மாற்றி அமைக்கப்படுவதுடன் அவைகள் புதிப்பிக்கப்படவேண்டிய கடப்பாடு யாவரையும் சாரும் (குறிப்பாக மதரசாக்கள்). மொழி ரீதியாக பின்னடைவில் உள்ள எம்மவர்கள் சற்று கவணமெடுக்க வேண்டும்.
இஸ்லாமிய பார்வை என்ற பெயரில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் ஒரு பகுதியான இஸ்லாமிய மார்க்க கல்வியும் சட்டமும் என்ற துறையில் இருந்து பரந்த கண்ணோட்டத்தில் வெளியீடுகள், ஆய்வுகள், துரைசார் நிபுணர்கள் தோற்றிவிக்கப்படவேண்டும்.
ஆலோசனைகளையும் அவாவையும் நவீனமயமாகும் இளைஞர் யுவதிகள் மற்றும் இஸ்லாமிய சிந்தனாவாதிகள் சற்று ஆராய்ந்து முன்னோக்கிய பயணத்திற்கு முதற்படி அமைக்க முன்வரவேண்டும்.
"ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி" (அல்குர்ஆன் : 96:3)
No comments:
Post a Comment