Arthur Conan Doyle தயாரிப்பில் 2009 இல் வெளியான திரைப்படமே Sherlock Holmes. இத்திரைப்படம் மூடநம்பிக்கை/ கண்கட்டி
வித்தை/ சூனியம்/ மாந்திரீகம் போன்றவற்றிற்கும் அறிவியல் விஞ்ஞானத்திற்கும்
இடையில் நடைபெறும் போராட்டத்தை சித்தரிப்பதாக அமையப்பெற்றுள்ளது.
பொதுவாக சூனியக்காரர்கள் அறிவியல் விஞ்ஞானத்தின்
நுணுக்கத்தை கற்று மானிடர்களை ஏமாற்றி வயிற்றை நிரப்பும் வண்ணமாகவே சமூகத்தில்
துலங்குகின்றனர். மத நம்பிக்கை கொண்டோரும் மூட நம்பிக்கை உச்சத்தை பெற்றோருமே
அதிகளவான தாக்கத்தை சூனியம் செலுத்துவதாக மிக சுவாரசியமான தொடர்ச்சியில்
கூறமுற்படுவது உண்மையில் திரைப்படத்திற்கு சுவாரசியத்தை வழங்கியுள்ளது.
எமது சமூகத்திலும் இவ்வாறான நடைமுறை இன்றும்
காணப்படுகின்றது. உளவியல், சூழல் காரணி, குறித்த மனிதனின் சூழ்நிலைமை என்பன
குறித்த சூனியக்காரனினால் மிக விரைவாக அடையாளம் கண்டு அதற்கு ஏற்றால்போல் தனது
எதிர்வுகூறலை முன்வைப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மாத்திரமே
இத்துறையில் நெடுங்காலம் ஜீவனை ஓட்ட முடியும்.
அறிவியலின் உச்சத்தை எட்டியுள்ளோம் என்று
வாய்கிழியக் கத்தும் நாம்தாம் ஒரு நோய்க்கான தீர்வை மூடநம்பிக்கை அடிப்படையில்
தீர்த்துவிடலாம் என்று எண்ணுகின்றோம். இங்கே வலு இழக்கப்படுகிறது உண்மை இறைவனின்
மீது கொண்ட நம்பிக்கை. அது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே கருத்து முரண்பாடு சமூகத்தின்
மத்தியில் உள்ளது.
“மந்திரம் கால் மதி முக்கால்” என்று இதனை
சுருக்கமாக விபரிப்பர்.
அவ்வாறாயின் பேய் பிடித்தவர்கள் தாங்கள்
அறியாத மொழிகளில் பேசுவது, மிகப்பெரும் பலம்
வாய்ந்த ஒருவராக திகழ்வது போன்றவை எவ்வாறு சாத்தியமாகும் என்று நீங்கள் வினா எழுப்பலாம்.
நிச்சயமாக அது உண்மைதான். இதனை சுருக்கமாக விளக்குகிறேன் பாருங்கள்.
அறியாத மொழிகளில் பேசுவது – “ ஒருவன்
தனது சூழலில் இருந்து பல்வேறு ஒலி, ஓசை, சத்தம் போன்றவற்றை செவியேகின்றான். அவ்வாறு
உள்வாங்கப்படும் ஒலி வகைகளில் ஒன்றே மொழி. இவற்றில் சில சொற்கள் எமது மனதில்
பதிவாகும். இவ்வாறு பதிவாகும் சொற்கள், சம்பவங்கள் என்பன எமது மூளையின் அதீத செயற்பாடு (குழப்பம்)
காரணமாக வெளியாகும். இவ்வாறே அவனால் வேற்று மொழிகளில் பேச முடிகின்றது. ஆனால்
இவ்வாறு பேசும் மொழிகள் தெளிவற்றதாக அதாவது வெறும் சொற்களை கொண்டு
கோர்க்கப்பட்டதாக மாத்திரமே காணப்படும்.
பலசாலி – பேய் ஏறியவனை பொதுவாக ஏனைய
மனிதர்கள் நெருங்க தயங்குவார்கள். அவ்வாறு தயங்கும் சிலர்/பலர் அவரை நெருங்கும்
போது அவனது செயற்பாடு அதீத சக்தி கொண்டவானாக பிரதிபலிக்கும். உதாரணமாக குடி போதையில்
இருக்கும் ஒரு குடிகாரனின் நிலைக்கு ஒப்பானது. அவனால் வலி, வழிகாட்டல் என்பன உணரமுடியாது.
ஆக மொத்தத்தில் தங்களின் பசியை போக்கவும்
சமூகத்தில் அந்தஸ்து பெறவும் ஒருவன் நாடும் முறை மாந்திரீகம் எனலாம்.
இலகுவாக புரிந்துகொள்ளவேண்டுமாயின்
“ குறித்த மந்திரவாதிகள் ஏன் அவர்களினால்
எவ்வளவோ தீராத நோயாளிகளுக்கு வைத்தியசாலை சென்று மருத்துவம் செய்ய இயலவில்லை”
“இருட்டிலும் அமாவாசையிலும் மாத்திரம் மருத்துவம்
செய்ய முடியும். வெளிச்சம் போட்டு மருத்துவம் செய்ய இயலாமல் உள்ளது”
“ஒன்றை அழிக்க இயலுமாக இருப்பின் ஏன்
ஒன்றை உருவாக்க முடியவில்லை”
ஆகமொத்தத்தில் அவர்கள் உயிர்வாழ உங்கள்
உயிரையும் உடமையையும் பணயம் வைக்கின்றார்கள். இதனை நம்பிய கூட்டமும் உணர்த்தும்
உணராதது போல பாசாங்கு செய்து மீண்டும் ஒளியை தேடி தீயில் கருகும் சில்வண்டிற்கு
ஒப்பாகின்றது....
No comments:
Post a Comment