“எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” (அல்-குர்ஆன்
: 2:170,
5:104, 31:21, 43:22,23)
அவ்வாறு இவர்கள் (நாத்திகர்கள்)
கூறுவதில்லை என்பதனால்.
நாத்திகர்கள் என்போர் யார்????
கடவுள் இல்லை என்று வாதிடுபவன்
நாத்திகன் ஆவான். உண்மையில் இவர்களால் கூற்றை ஏற்கத்தான் வேண்டும்.
ஏனெனில் இவர்கள் சிந்திக்கின்றார்கள்.
கடவுள் யார் என்பதை அவர்கள் உணர்ந்து வைத்துள்ளார்கள். ஆதலால் இவர்கள் தான் காணும்
கடவுள்களை போலி என்று கூறுவது மாத்திரமன்றி கடவுளே இல்லை என்றும் முடிவுக்கு வந்துவிடுகின்றார்கள்.
பொதுவாக இறைவனை பின்பற்றும் பலர்
தங்களின் பெற்றோர் எந்த மார்க்கத்தில் இருந்தார்களோ அதனையே அவர்களும் பின்பற்றுகின்றார்கள்.
நானும் உட்பட.... ஆனால் நாத்திகர்கள் அவ்வாறு பின்பற்றுவதில்லை. அவர்கள் தங்களை
சூழவுள்ள நிஜங்களை மாத்திரம் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மாறாக மூட நம்பிக்கையும் கற்பனைகளையும்
ஏற்றுக்கொள்ளவில்லை.
உண்மையான நாத்திகன் என்பவன்
அவன் உண்மையை தேடுவதில் தன்னை அர்பணிப்பதுடன் அவ்வாறு உண்மையை அவன் இனங்காணும்
பட்சத்தில் ஏற்றுக்கொள்பவனாகவும் திகழ்கின்றான். இவ்வாறான நாத்திகர்களே என்னைக்
கவர்ந்தவர்கள்.
அதைவிடுத்து நானும்
நாத்திகன் என்று கூறி தன்னை சமூகத்தில் அறிவாளியாக பிரதிபலிக்கும் முட்டாள்களை
இன்று நான் அதிகம் காண்கிறேன். அதுமட்டுமன்றி தாங்கள் கூறவது மட்டுமே சரி என்று
விதண்டாவாதம் செய்யும் மனநிலையிலே இவர்கள் இருக்கின்றார்கள். என்னைப்
பொருத்தமட்டில் இவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களே. காரணம் நாத்திகன்
என்று கூறி பல உண்மைகளை மறுப்பதனால்.....
கடவுள் இருக்கின்றார் என்பதை
நிறுவிக்காட்டுங்கள் என்று அநாத்திகர்கள் இடத்தில் சவால்விடும் இவர்கள் ஏன் கடவுள்
இல்லை என்று நிறுவிட முயற்சிக்கவில்லை என்பது எனது நீண்டகால சந்தேகம்.
நீங்கள் உண்மையான நாத்திகராக
இருப்பின் நிச்சயமாக உண்மையை உணர வாய்ப்பு இருப்பின் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல்
இருக்கமாட்டீர்கள். நாத்திகர்களாக நடிப்பவர்கள்தான் உண்மையை கூறினாலும் இல்லை நான்
பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிப்பது மட்டுமன்றி வீணான தர்க்கம்
செய்யவும் முயற்சி செய்து தோல்வியுற்றும் தோல்வியை ஏற்காமல் தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்தி
ஜெயிச்சவனாக தங்கள் மனதுக்குள் ஆனந்தம் அடைந்துகொள்வார்கள். இவ்வாறான பலரை நான்
அன்மைக்கலங்களில் அதிகம் காண்கின்றேன்.
இவர்களிடம் மற்றுமொரு
சிறப்பும் உண்டு. இவர்கள் அவர்களின் எடுகோளாக நவீன அறிவியல் விஞ்ஞானத்தை
கருதுகிறீர்கள். அத்துடன் பெரும் விஞ்ஞானிகளின் கூற்றுக்களையும் கொள்கைகளையும்
அடிப்படையாக கொண்டும் ஏனைய வழிகளில் இருந்து சுடப்பட்ட வினாக்களை வினவியும் தங்களை
மா மேதையாக எண்ணி மமதை கொண்டதுதான் மீதம்.... ஏன் எனில் இவர்கள் வினவும்
குறிப்பிட்ட வினாக்கள் மாத்திரமே தொடர்ந்து நாத்திகர்களின் வினாக்களாக இருந்து
வருகின்றது.
நாத்திகர்களுக்கு எனது
வினா....
நீங்கள் கடவுள் இல்லை என்று கூறுகின்றீர்கள். நான் இறைவன் உண்டு என்று
கூறுகின்றேன்.அவ்வாறாயின்
நீங்கள் கூறுவது போன்று
கடவுள் இல்லை என்றால் நானும் நீங்களும் சமம். ஆனால் நான் கூறுவது போன்று இறைவன்
உண்டு என்றால் நான் தப்பித்துக்கொள்வேன் நீங்கள்????
உலகில் நூறு கொலை செய்தவனுக்கும்
ஒரு தூக்குத்தண்டனை, அதேபோல் ஒரு கொலை செய்தவனுக்கு ஒரே தூக்குத்தண்டனை தான்
இது எவ்வாறு நியாயமாகும்.....
No comments:
Post a Comment