பெருவெடிப்புக் கோட்பாடு என்றழைப்பது
பிரபஞ்சத்தின் தோற்றத்தை குறித்து விளக்குவதான கோட்பாடாகும். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் சொற்பதத்தை அமெரிக்க விஞ்ஞானியான “ஜோர்ஜ்
கேமோவ்” என்பவரே பயன்படுத்தினார். பிற்பட்ட காலப்பகுதியில் இது மேலும் பிரபல்யம்
அடைந்தது.
பெல்ஜிய கத்தோலிக்க பாதிரியார் மற்றும் வானியல்
துறை நிபுணரும் இன்னும் லியூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியருமான
“ஜார்ஜஸ் லெமாட்ரே” என்பவரினால் 1927 ஆம் ஆண்டில் இக்கோட்பாடானது உலகிற்கு முதன் முதலில் வெளியிடப்பட்டது.
இக்கோட்பாடானது பிற்பட்ட
காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, ஆய்வுகள், வானியலாளர்களினால்
சேகரிக்கப்பட்ட தரவுகள் என்பன இக்கருத்தை ஆதரிக்கக்கூடியதாக இருந்ததுடன் இக்கோட்பாட்டிற்கு
வலுசேர்ப்பதாகவும் அமைந்தது.
பெருவெடிப்பு எனப்படுவது பிரபஞ்சமானது
ஆரம்பத்தில் மிக அடர்த்தி கூடிய ஒரு மிகச்சிறிய புள்ளியாக திகழ்ந்தது. பின்னர் இதில்
ஏற்பட்ட அமுக்கம் காரணமாக உண்டான விரிசலில் (Rift) பிரபஞ்சம் தோற்றம் பெற்றது.
இதன் விளைவாக பால்வீதிகள் (Milky Way), நட்சத்திரமண்டலம் (Star zone), நட்சத்திரங்கள்,
கிரகங்கள், சூரியன், சந்திரன் என்பன தோற்றம் பெற்றன. இந்நிகழ்வானது அண்ணளவாக
சுமார் 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு நிகழ்வாகும்.
இந்நிகழ்வு பற்றி புனிதஅல்-குர்ஆன் பின்வருமாறு விபரிக்கின்றது.
“நபியின் கூற்றை நிராகரித்தவர்கள் சிந்தித்துப்
பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன பிறகு அவற்றை, நாம்தாம் தனித்தனியாகப் பிளந்தோம். ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து
படைத்தோம்; எம்முடைய இந்தப் படைப்புத்திறனை அவர்கள்
ஏற்கமாட்டார்களா?” (அல்-குர்ஆன் 21:30)
“பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது அதைப் படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள்
விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு)
அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின” (அல்-குர்ஆன்
41:11)
மேற்கூறப்பட்ட அல்-குர்ஆனிய வசனமானது ஆரம்பத்தில்
வானம் புகையாக இருந்தமையினைக் குறிப்பிடுகின்றது. இங்கு அல்-குர்ஆன் “தஹாஹுன்” “புகைமண்டலம்”
என்ற சொல்லைக் கையாள்கின்றது.
இவ்வசனத்தில் அல்-குர்ஆன் புகைமண்டலம் என்று கூறப்படுவதற்கான காரணத்தை
ஆராய்கையில்; பெருவெடிப்புக்கு பின்
உண்டான தூசி துணிக்கைகள் ஒன்றிணைந்ததன் மூலமாகவே கிரகங்கள், உடுக்கள்
தோற்றம்பெற்றன.
இதனை 20ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியிலேயே ஆய்வாளர்கள் கண்ட
றிந்தனர். குர்ஆனிய 41:11 இவ்வசனம் பெருவெடிப்பு கொள்கைக்கு மேலும் விளக்கமாக அமைந்துள்ளது.
பெரும் வெடிப்பு
ஏற்படுவதற்கு முன் அகிலம், நேரம் என்ற விடயங்கள் உருவாகவில்லை. இவ் வெடிப்பின் போது வெளிவிடப்பட்ட
பாரிய சக்தி காரணமாகச் சடப்பொருட்கள்,
ஈர்ப்பு விசை, மின் காந்த இயல்பு என்பன தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிரபஞ்சம் ஆரம்பிக்கப்பட்ட போது தோன்றிய கதிர்வீசல்கள் இன்றும் காணப்படுவதாக
கண்டறிந்துள்ளனர். இவ்வாறான கதிர்வீசல்கள் பிந்திய கதிர்வீசல்கள் எனப்படுகின்றது.
பெருவெடிப்பு
கோட்பாட்டை ஒத்த கொள்கை கி. பி. 1922 ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளருமான அலெக்சாந்தர் ஃபிரீடுமேன்
என்பவர் “அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக் கோட்பாட்டில்” இருந்து பிரீடுமன் சமன்பாடு
என்ற ஒன்றை உருவாக்கினார். இச்சமன்பாட்டையும் மேலும் நிலையான அண்டக் கொள்கையையும் கொண்டு இப்பிரபஞ்சம்
மொத்தமாக விரிவடையாமல் இருந்தி ருக்குமென எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment