பிரபஞ்சத்தில் தனக்கென
ஒரு தனித்துவ சிறப்பியல்புகளை கொண்டு அமையப் பெற்றதுதான் எம் புவியின் உள்ளக வெளியக
பௌதீக அமைப்பு. இவ்வாறான அமைப்பு மனிதயின த்தினதும் மற்றும் உலகின் அனைத்து
உயிரியல் கூறுகளின் நிரந்தர நிலவு கைக்கும்
வழிவகுக்கக் கூடியதாக உள்ளது.
புவிக்கென
தனித்துவ சில கட்டமைப்புக்கள் மற்றும் சிறப்பியல்புகள் பற்றிய விஞ்ஞானிகளின்
நீண்டகால தேடல் இதற்கான ஆதாரங்களையும் இன்னும் சான்றுகளையும் பறைசாட்டி அமைகின்றது.
பூமியை சூழவுள்ள
வளிமண்டலம் மீதான ஆய்வுகளின் விளைவாக நாம் வாழும் பூமியின் வான்படை ஒழுங்கமைப்பும்
அதனது விசேடவகை தொழிற்பாடுகளும் கண்டறியப்பட்டது. வளிமண்டல படைகளின் அமைப்பானது அமுக்கம்,
வாயுக்களின் தன்மை, படைகளின் தொழிற்பாடுகள்
என்பவற்றைக் கொண்டே இன்று வேறுபடுத்தப்பட்டுள்ளது.
புவியின் வளிக்கோள
அமைப்பானது ஏழு வகையான வளிக்கோள படைகளையும் ஒவ்வொரு படைகளுக்கும் தனக்கென தனித்தன்மை
வாய்ந்த தொழிற்பாடுகளையும், கூறுகளையும் உள்ளடக்கியதாக
காணப்படுகின்றது. இவ்வாறான படைகள் பூமியின் மேற்பரப்பிலிருந்து வெவ்வேறு வகை மட்டங்களில்
அமையப்பெற்றுள்ளது.
புவி மேற்பரப்பின் ஆரம்ப வளிப்படையாக மாறன் மண்டலமும்
தொடர்ந்து ஓசோன் படை, படை மண்டலம், இடை மண்டலம், வெப்ப மண்டலம், அயன் மண்டலமும்
இறுதியாக புறமண்டலமும் காணப்படுகின்றது. இதுபற்றி புனித அல்-குர்ஆன் இவ்வாறு
கூறுகின்றது.
“ஏழு வானங்களையும் அல்லாஹ் அவன்தான் அடுக்கடுக்காய் எப்படிப்
படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா” (அல்-குர்ஆன்
71:15, 2:29, 17:44,
41:12, 23:86, 67:3, 78:12)
இங்கு “ஏழு வானம்” என்ற அரபுப் பதத்திற்கு அறிஞர்கள் இரண்டு வேறுவகையான கருத்துக்களைத் முன்வைக்கின்றனர்.
ü பூமியினை சூழவுள்ள வான்படையின் எண்ணிக்கை.
ü நாம் எமது கண்கள் மூலமாக காணும் வானத்தைப் போன்று ஏழு அடுக்குகளைக் கொண்ட வானங்கள். இவைகளே மேற்படி இரு கருத்துகளாகும்.
எது எவ்வாறு
இருப்பினும்; நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையானது பூமியின் வான்மண்டல வெளிப்படைகளின்
எண்ணிக்கையுடன் புனித அல்-குர்ஆன் கூறும் கருத்தும் ஒத்துப்போகின்றது.
நான் இதனை
அடிப்படையாகக் கொண்டு எனது ஆய்வினை தொடர்கின்றேன். இருப்பினும் இதன் உண்மை தன்மை
குறித்த அறிவு தற்போதைய விஞ்ஞானத்திற்கு எட்டாக்கனியாக இருக்கின்றது.
புனித அல்-குர்ஆன் வளிமண்டல படைகளின் எண்ணிக்கையை கூறியதுடன் மாத்திரம் நின்று
விடாமல் அது தொடர்ந்து வளிமண்டல படைகளின் தொழிற்பாடுகளையும் விபரிக்கின்றது.
இதுபற்றி மகத்துவமிக்க திருமறை அல்-குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது.
“மேலும், வானத்தைப்
பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம்; ஆயினும், அவர்கள் அவற்றிலுள்ள
அத்தாட்சிகளைப் (ஏன்) புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்-குர்ஆன் 21:32, 40:64, 52:5)
இவ்வசனத்தில் பாதுகாக்கப்பட்ட
கூரை என விபரிப்பதற்கான காரணம் தான் என்னவென்று ஒருகணம் பார்த்தால்; பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் கண்டறியப்பட்ட சான்றுகள் எமக்கு விளக்கமளிக்கக் கூடியதாக அமைந்துள்ளன. அவ்வாறான சான்றுகள் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான த்தின் பெரும்
கண்டுபிடிப்புகள் எனலாம்.
விண்வெளியில்
இருந்து வருகின்ற பூமிக்கு உகந்ததல்லாத சில பதார்த்தங்களும், சக்திகளும் பூமியை
வந்தடையாது புவியின் புறவளிமண்டலம் மற்றும் புவிக்காந்தப்புலம் என்பன
தடுக்கின்றது. சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்வீச்சு (Ultraviolet-UV), எக்ஸ் கதிர்வீச்சு (X-Ray), சூரியப்புயல் (Geomagnetic solar storm) மற்றும் விண்வெளியிலிருந்து சுயாதீனமாக விடுவிக்கப்படும்
எரிநட்சத்திரங்கள் (Sooting Star) என்பன மனிதன் மற்றும்
ஏனைய புவி வாழ் உயிரினங்கிகளின் நிலவுகையினை பாதிக்காமல்
எமது வளிமண்டலமும், புவிக் காந்தப்புலமும் எம்மை பாதுகாக்கின்ற செயற்பாட்டை
மேற்கொள்கின்றது.
சூரியனில் ஏற்படுகின்ற சூரியபுயல் (solar storm) எனப்படுவது; சூரியனின் மேற்பரப்பில் ஏற்படுகின்ற சக்தி வாய்ந்த
வெடிப்புடன்; இன்னும் சக்தி வாய்ந்த காந்தப்புயல், கதிர்வீசல் என்பன நிகழ்வதாகும்.
இதனால் ஞாயிற்றுத் தொகுதியில் (Solar System) உள்ள கோள்கள் இவற்றின் பாதிப்புக்களை அனுபவிக்கும்.
1859ஆம் ஆண்டில் நிகழ்ந்த சூரியப்புயலில் எமது பூமியின் தொலைத் தொடர்பாடல் (Communication) முறைகள் பாதிப்புற்றமை நாம் அனைவரும் அறிந்த உண்மையே.
இவ்வாறான நிகழ்வுகளின் போது எமது புவிக்காந்தப்புலமும் மற்றும் வளிக்கோளமும் பூமியில்
ஏற்படவிருக்கும் அனர்த்தங்களை விட்டும் எம்மை பெருமளவிற்கு பாதுகாக்கின்றது.
மேலும்
வான்பொருட்களான எரிநட்சத்திரம், விண்கற்கள் என்பன பூமியின் ஈர்ப்பு எல்லைக்குள்
உள்வாங்கப்படும் சமயம்; பூமியின் வளிப்படை ஏற்படுத்தும் தடை (உராய்வு) காரணமாக அவைகள்
மீது தீப்பற்றி அவைகள் தூசுக்களாக மாறுகின்றன. காரணம் இதனால் ஏற்படும் பாதிப்புக்களை
இப் பூமியானது அனுபவித்திருக்கின்றது. உதாரணமாக சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் அழிவுற்ற சம்பவம், 1980இல் அமெரிக்க
அரிசோனா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் மிக அண்மையில் (15.02.2013) ரஷ்யாவில்
ஏற்பட்ட பாதிப்பு என்று அடிக்கிக்கொண்டே செல்லமுடியும்.
வான்
பொருட்களினால் முன்னைய காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் ஏற்பட இருக்கின்ற
பாதிப்புக்களை நாசாவின் அறிக்கைகள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன. மேலும் இக்கருப்பொருளை
அடிப்படையாக கொண்டு ஹொலிவூட்டில் (Hollywood) பல திரைப்படங்கள்
வெளிவந்துள்ளன. ஜுராசிக் வேல்ட் (Jurassic World), றான்ஸ்போர்மஸ் (Transformas) என்பவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.
வளிமண்டலத்தின்
தொழிற்பாடு சம்மந்தமாக தொடர்ந்த அண்மைக்கால ஆராய்ச்சியின் முடிவாக வளிமண்டலமானது பூமிக்கு
வரும் பதார்த்தங்களை மீண்டும் வானுக்கு (புறவெளிக்கு) திருப்பியனுப்பும்
தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது என்ற உண்மை அறியப்பட்டது.
வளிமண்டல ஆராய்ச்சிக்கான
பல்கலைக்கழக கூட்டுத்தாபனம் மற்றும் பென்சில்வேனியா மாநில பொது ஒளிபரப்பு கூட்டுத்தாபனம்
என்பன நான் மேற்குறிப்பிட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.
பூமியின்
வளிமண்டலத்தின் திருப்பி அனுப்பும் செயற்பாட்டின் அடிப்படையில் நவீன உலகின் தொலைத் தொடர்பாடல் சாத்தியமாகின்றது. புவி
மேற்பரப்பிலிருந்து ஆவியாகும் நீரானது மீண்டும் மழையாக பொழிவதற்கும், ஓசோன்
படையானது சூரியனிலிருந்து வெளிவிடப்படும் புறஊதா கதிர்கள் மற்றும் அதிஉயர்
சக்திகொண்ட எக்ஸ் கதிர் (X-ray) வீச்சுக்கள்
என்பவற்றை மீண்டும் வானுக்கு திருப்பி அனுப்பும் செயற்பாட்டை மேற்கொள்கின்றது.
சூரியனிலிருந்து
வெளிவிடப்படும் செங்கீல் கதிர்கள் அல்லது
வெப்பக்கதிர் (IR Rays) என்பன பூமியின் வளிமண்டல எல்லைக்குள் மீண்டும்
மீண்டும் தெறிப்படையச் செய்வதன்மூலம் புவியின் (பச்சை வீட்டு விளைவு) உயிரியல்
நிலவுகைக்கு தேவையான சூழல் வெப்பநிலையை
பேணுவதிலும் வளி மண்டலத்தின் திருப்பியனுப்பும் செயற்பாடு உதவுகின்றது. வளி மண்டலத்தின்
இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் மானிட வாழ்க்கைக்கும் தொடர்ச்சியான புவியின்
உயிரியல் வாழ்க்கைக்கு மிகவும் அத்திய அவசியமான செயற்பாடாக இன்று கருதப்படுகின்றது.
இதுபற்றி புனித
அல்-குர்ஆனில் கீழ்வருமாறு கூறப்படுகின்றது. “திருப்பித்தரும் வானத்தின் மீது
சத்தியமாக” (அல்-குர்ஆன் 86:11). இவ்வசனமானது வானத்திலிருந்து திருப்பப்படும்
அனைத்துவிதமான பொருட்கள் மற்றும்
செயற்பாடுகளையும் சுருக்கமாக குறிப்பிடுகின்றது.
உதாரணமாக மழை
பொழிவு சம்மந்தமாக அல்-குர்ஆன் “இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே
அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை” (அல்-குர்ஆன் 15:22) இவ்வாறு விபரிக்கின்றது. இது சம்மந்தமாக நான்
புவியியல் தலைப்பில் நீரியல் வட்டம் எனும் உபதலைப்பில் விபரித்துள்ளேன்.
No comments:
Post a Comment